பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருகின்றன.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான மக்கள் மத்திய லண்டன் வழியாக அணிவகுத்துச் சென்றனர்.
ஊதியத்தை விட வேகமாக அதிகரித்து வரும் பில்கள் மற்றும் பிற செலவுகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பிரித்தானிய தலைநகரில் பெரும் மக்கள் கூட்டம் பேரணியில் இடம் பெற்றது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் தாமதமாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறார்.
உக்ரைனில் ரஷ்யாவின் போர்காரணமாக எரிபொருள் மற்றும் கோதுமை போன்ற உணவுப் பொருட்களின் விநியோகம் முடங்கியுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியா மற்றும் ஐரோப்பா முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
COVID-19 தொற்றுநோயிலிருந்து உலகளாவிய பொருளாதார மீட்சியின் விளைவாக வலுவான நுகர்வோர் தேவை ஏற்பட்டுள்ளது.
