லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம்….

0

லண்டன் – கெண்டனில் (Kenton) புலம்பெயர் தமிழர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துமாறு வலியுறுத்தி அம்பிகை செல்வகுமார் என்பவர் 16 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு ஆதரவு அளிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் அவரது இல்லத்துக்கு வெளியில் நேற்று ஒன்று கூடியதால் இதன்போது காவல்துறையினர் அங்கு சென்று ஒருவரை கைது செய்ததாக கூறப்படுகிறது

கைது செய்யப்பட்டவரை பின்னர் விடுவித்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியை ஏந்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here