லண்டனில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு! இளைஞர்களிடையே பரவும் ஆபத்து..!

0

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது 400 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது இந்தியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதம மந்திரி தெரிவிக்கையில் இந்த வாரம் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் மாறுபாட்டை விட 60 சதவீதம் அதிகமாக இருக்க கூடும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஆராய்ச்சியாளர்கள் இது இளைஞர்களை அதிகம் தாக்குவதாக கூறியுள்ளனர்.

வரும் ஜுன் 21-ஆம் திகதி அனைத்து ஊரடங்கிற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த எதிர்பார்க்கும் நிலையில் இந்த புதிய வைரஸ் பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

அதிகாரப்பூர்வ தகவல் படி பிரித்தானியாவில் இந்தியாவின் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் 1,313-ஆக உள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் மாறுபாடு அதிகரித்து வருவதாக பொது சுகாதார இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கொரோனா வைரஸ், உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சாத்தியமான வழக்குகள் லண்டனில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

வடமேற்கில் 319 பேருக்கும் தென்கிழக்கில் 98 பேருக்கும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பரவி வரும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் ஆன்டிபாடிகளுக்கு அதிக எதிர்ப்பாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here