லண்டனில் பாடசாலை மாணவியை சீரழித்த கும்பல்….!

0

தெற்கு லண்டனின் டெப்ட்போர்டில் உள்ள பெப்பிஸ் பூங்காவில் பட்டப்பகலில் வைத்து பாடசாலை மாணவி ஒருவரை, சிறுவர்கள் மூவர் திட்டமிட்டு சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 22ம் திகதி சுமார் 4.30 மணியளவில் பேருந்தில் இருந்து இறங்கிய 15 வயதேயான பாடசாலை மாணவி, பெப்பிஸ் பூங்காவிற்கு சென்றதுடன், ஒரு இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார்.

அப்போது 16 அல்லது 17 வயது மதிக்கத்தக்க ஒருவன் மாணவியை அணுகியுள்ளான்.

அதேவேளை சம வயதுடைய இன்னும் இருவரும் இணைந்து கொண்டுள்ளனர்.

சட்டென்று மாணவியின் மொபைல் போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, மொபைல் போனுக்காக அந்த மூவர் கும்பலை துரத்தியுள்ளார்.

ஆனால் அந்த கும்பல் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று, பூங்காவின் இன்னொரு பகுதியில் வைத்து கூட்டாக சீரழித்துவிட்டு மாயமாகியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவி பொலிசாரை நாடி புகார் அளித்துள்ளார்.

மாணவியை பட்டப்பகலில் சீரழித்த மூவரும் ஆசிய நாட்டவர்கள் அல்லது கருப்பினத்தவர்கள் என புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை கைது நடவடிக்கைகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை எனவும்,

புகாரில் குறிப்பிட்டுள்ள அடையாளங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here