லண்டனில் பயங்கர சம்பவம் கத்திக்குத்துக்கு இழக்காகிய 14 வயது சிறுவன்!

0

பிரித்தானியாவின் கிழக்கு லண்டனின், Canning நகரில் பீட்சா கடைக்கு வெளியே 14 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காணப்படுவாக பொலிசாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் விரைந்து வந்த பொலிசார், சிறுவனின் உடலை மீட்டு முதலுதவி சிகிச்சை கொடுத்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களில் உயிரிழந்துவிட்டான்.

மேலும் பொலிஸார் அந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

யாரேனும் இது குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here