லண்டனில் நதிக்கரையில் சிறுவனின் உடல்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

லண்டனில் Ladbroke Grove பகுதியை சேர்ந்த RichardOkorogheye சிறுவன் பல வாரங்களாக காணவில்லை என்று காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் Epping நதிக்கரையில் சடலமொன்று கிடப்பதாகவும் அது காணாமல் போன சிறுவனாக இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி வெளியிட்ட அறிக்கையில்

அதில் ஏப்ரல் 4ஆம் திகதி Epping Forest பகுதியில் உள்ள நதிக்கரையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனை உறுதி செய்ய RichardOkorogheye உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுவன் கடந்த மார்ச் 22ஆம் திகதி லண்டன் Ladbroke Grove பகுதியிலுள்ள தன் வீட்டை விட்டு சென்றுள்ளார்.

அவர் கடைசியாக 23ஆம் திகதி Epping Forest பகுதி நோக்கி நடந்து செல்வதை சிசிடிவி மூலம் காண முடிகிறது.

எனவே இது சிறுவனாக இருக்கக்கூடும் என எங்கள் தரப்பில் நம்பப்படுகிறது.

மேலும் RichardOkorogheye ஒரு உயிரனு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் இரத்த மாற்றத்திற்காக மட்டுமே மருத்துவமனைக்கு செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here