லண்டனில் நண்பரை சந்திக்க சென்ற ஆசிரியர் படுகொலை

0

இங்கிலாந்தில் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள இரவு விடுதியில் நண்பரை பார்க்க சென்ற ஆசிரியையின் கொலை மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பூங்காவில் ஆசிரியர் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேக நபரை பிரிட்டிஷ் பொலிஸார் கைது செய்தனர்.

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி, தெற்கு லண்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து ஆசிரியர் சபீனா நேசா இரவு 8:30 மணிக்கு கிளம்பியுள்ளார். கிட்ப்ரூக் கிராமத்தில் கேட்டர் பூங்கா வழியே கேளிக்கை விடுதிக்கு சென்றிருக்கிறார். ஆனால், அங்கு அவர் செல்லவே இல்லை. அடுத்த நாள் மதியம், அவரின் உடல் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து துப்பறியும் பிரிவு ஆய்வாளர் ஜோ கேரிட்டி கூறுகையில், “ஐந்தே நிமிடத்தில் சபீனா அந்த இடத்தை அடைந்திருக்கலாம். ஆனால், அங்கு அவர் செல்லவே இல்லை” என்றார்.

சந்தேகத்தின் பேரில் 38 வயதான ஒருவரை தெற்கு லண்டன் லூவிஷாமில் கைது செய்ததாக பொலிஸார் பின்னர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதில் இருக்கும் நபரையும் வாகனத்தையும் எங்கேனும் பார்த்திருந்தால் தகவல் தெரிவிக்கும்படி பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து துப்பறியும் தலைமை ஆய்வாளர் நீல் ஜான் கூறுகையில், “சிசிடிவியில் உள்ள அந்த நபரின் அடையாளம் அல்லது அவர் எங்கிருக்கிறார் பற்றிய தகவல்கள் கிடைத்தால், எங்கள் விசாரணைக்கு அது உதவியாக இருக்கும்” என்றார். திங்கள்கிழமை நடத்தப்பட்ட உடற்கூறாய்வின் முடிவுகள் வழக்கு குறித்து எந்த ஒரு தெளிவையும் ஏற்படத்தவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here