லண்டனில் தாய்ப்பாலில் நகை தயாரிப்பு… புதிய சாதனை

0

லண்டனைச் சேர்ந்த சஃபியா ரியாத் மற்றும் அவரது கணவர் ஆடம் ரியாத் ஆகியோர் மெஜந்தா ஃப்ளவர்ஸ் (Magenta Flowers) என்ற விருது பெற்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனம் 2019-ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வாழ்வில் நிகழும் மிகவும் முக்கியமான தருணங்களில் பயன்படுத்தப்படும் மலர்களை விலைமதிப்பற்ற நினைவு பரிசுகளை வழங்கியுள்ளது.

இதுவரை சுமார் 4,000 ஆர்டர்களை வழங்கியுள்ளது.

இந்நிறுவனம் இப்போது தாய்ப்பாலில் இருந்து விலையுயர்ந்த கற்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

மூன்று பிள்ளைகளுக்கு தாயான சஃபியா, தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார்.

மேலும் அதுபற்றிய நினைவுகளை தாய்மார்கள் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தைப் புரிந்து கொண்டுள்ளார்.

இது தாய்மார்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இடையே ஒரு உணர்வுபூர்வமான தொடர்பை வழங்குகின்றது.

மேற்கத்திய நாடுகள் தாய்ப்பாலில் இருந்து நகைகள் தயாரிக்கும் வழக்கம் கொண்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் காலத்தின் போது, சஃபியா படித்த கட்டுரை ஒன்று அவரை தனது தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உந்தியுள்ளது.

அது பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்ட சஃபியா தற்போது அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

முதலில் தாய்பாலில் உள்ள திரவத்தை நீக்கிவிட்டு, அதனுடன் நிறமற்ற பிசினைக் கலந்து நகைகளை உருவாக்குகிறார்.

இதனால் தாய் பால் நிறம் மாறாமல் நிலைத்து நிற்க முடியும் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

தற்போது தாய் பால் மூலம் நகைகள் தயாரிக்கும் புதிய தொழிலில் கால் பதித்துள்ள அந்நிறுவனம், 2023ம் ஆண்டுக்குள் 1.5 மில்லியன் டொலர்கள் வரை வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.

தாய்ப்பால் நகைகளில் நெக்லஸ்கள், காதணிகள் மற்றும் மோதிரங்கள் செய்யப்படுகிறது.

தாய்ப்பாலில் நகை தயாரிப்பு! லண்டனில் 3 குழந்தைகளின் தாய் வியக்கவைக்கும்  சாதனை - லங்காசிறி நியூஸ்
தாய்ப்பாலில் நகை தயாரிப்பு! லண்டனில் 3 குழந்தைகளின் தாய் வியக்கவைக்கும்  சாதனை - லங்காசிறி நியூஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here