லண்டனில் தயாராகிறது அம்பானியின் அடுத்த வீடு

0

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும்,’ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி, இரண்டாவதாக தன் குடும்பத்தினருக்காக லண்டனில் ஒரு வீட்டை தயார் செய்து வருகிறார்.

லண்டன் பக்கிங்காம்ஷயரில் இருக்கும், 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ‘ஸ்டோக் பார்க்’ வீட்டை தயார் செய்து வருவதாக, ‘மிட் டே’ பத்திரிகை தெரிவித்துள்ளது. முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு, மும்பையில் மிகப்பெரும் பணக்காரர்கள் வசிக்கும் ‘அல்டாமவுன்ட்’ சாலையில், ‘அன்டிலியா’ எனும் பெயரில் மிகப்பெரிய வீடு உள்ளது.

கொரோனாவை முன்னிட்டு, அம்பானி குடும்பத்தினர் தங்களுடைய பெரும்பாலான நேரத்தை இந்த வீட்டிலேயே செலவிட்டதை அடுத்து, மாறுதலுக்காக, இரண்டாவதாக ஒரு வீட்டை தயார் செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். இதையடுத்து, லண்டனில் உள்ள வீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்த வீட்டை, இவ்வாண்டின் தொடக்கத்தில் தான், 592 கோடி ரூபாய்க்கு அம்பானி வாங்கினார். இந்த வீட்டில் மொத்தம் 49 படுக்கை அறைகள் உள்ளன. சிறப்பான மருத்துவ வசதிகளையும், இந்த ஆடம்பர வீடு கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here