லண்டனில் சுரங்க ரயில் நிலைய வாசலில் தீக்குளித்த நபரால் பரபரப்பு

0

பிரித்தானியாவில் லண்டனில் கேம்டன் டவுன் (Camden Town) சுரங்க ரயில் நிலையத்தில், வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஒரும் வர் தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென மற்ற பயணிகளின் முன்னிலையில் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக லண்டன் பெருநகர பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக பொலிஸார், லண்டன் ஏர் ஆம்புலன்ஸ் குழு, மருத்துவர்கள் குழு மற்றும் சில பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் வந்தனர். தீக்குளித்த நபர் மீதான நெருப்பை அணைத்து, விமான ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அந்த நபரின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதிபடுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த நபர் மனநலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அப்பகுதிக்கு 2 தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டதால், போக்குவரத்து சற்று தடை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here