லண்டனில் கோர விபத்து! பெண் ஒருவர் பலி!

0

மேற்கு லண்டனின் ரிச்மண்டின் டிவிகென்ஹம் சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் பெண்ணொருவர் மீது கார் மோதியதில் அவர் பலியாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில் உயிரிழந்த பெண்ணின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் சிறப்பு அதிகாரிகள் அவருக்கு உதவியாக இருக்கின்றனர்.

சம்பவத்தில் தொடர்புடைய கார் ஓட்டுனர் அதே இடத்திலேயே இருந்திருக்கிறார்.

இது தொடர்பாக நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் வீடியோ பதிவு எதாவது இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here