லண்டனில் கோர சம்பவம்…! தாக்கப்படும் சிறுவர்கள்…!

0

லண்டனின் தென்-கிழக்கு பகுதியில் உள்ள Woolwich New-ல், திங்கட்கிழமை மாலை 5.20 மணியளவில், 15 வயது சிறுவன் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் கும்பலால் தாக்கப்பட்டுள்ளான்.

கையில் வைத்திருந்த குடையை வைத்து சமாளிக்க முயன்றபோதும், 2 கத்திகளைக் கொண்டு சிறுவன் பல முறை குத்தப்பட்டான்.

பொதுமக்கள் பலரும் நிறைந்திருந்த பிஸியான சாலையில் இக்கொலை நடந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் அவசர அம்புலன்ஸ் சேவை உடனடியாக வந்தனர்.

சிறுவனுக்கு CPR உள்ளிட்ட முதலுதவிகள் கொடுக்கப்பட்ட பிறகும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்நிலையில் சாலையின் ஓரமாக தார்பாலின் வைத்து மறைக்கப்பட்டு சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

இச்சம்பவம் இடம்பெற்ற அடுத்த 7 மணித்தியாலத்திற்குள் மற்றோரு சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான்.

தெற்கு லண்டனில் உள்ள Lambeth, ஓவல் பிளேஸில், 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக திங்கட்கிழமை இரவு 11.45 மணியளவில் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

லண்டன் ஆம்புலன்ஸ் சேவையுடன் வந்த அதிகாரிகள் சிறுவனை சோதித்ததில், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த்ததாக தெரிவித்தனர்.

தொடர்ந்து சிறுவனின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

எனினும் இச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here