லண்டனில் கோர சம்பவம்…. அடுக்கு மாடியில் இருந்து விழுந்து பலியாகிய பெண்…

0

லண்டனின் கிரீன்விச்சில் 6-வது மாடியில் இருக்கும் பால்கனியில் இருந்து 50 வயது மிக்க அந்த பெண் விழுந்து உயிரிழந்துள்ளார்.

தென்கிழக்கு லண்டன், கிரீன்விச்சில் உள்ள Barge Walk பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது

அவர் விழுந்த சில நிமிடங்களில், பொலிசுக்கு தகவல் அறிந்து வந்தனர்.

அதன் போதே உடனடியாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை வரவழைக்கப்பட்டது.

ஆனால், உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அப்பெண் சில நொடிகளில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

அவர் பால்கனியிலிருந்து விழுந்ததை ஒருவர் பார்த்துள்ளார்.

ஆனால் அவர் எப்படி விழுந்தார் என தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், லண்டன் பொலிஸார் பெண்ணின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மரணம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 101-ஐ அணுகுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here