லண்டனில் கொடூரமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட குழந்தை! பெற்றோர் கைது

0

லண்டனில் பெஞ்சமின் ஓ’ஷியா (Benjamin O’Shea), 26 வயது மற்றும் நவோமி ஜான்சன் (Naomi Johnson), 24 வயது ஆகிய இருவரும் துணை மருத்துவர்கள் (Paramedics ) என கூறப்படுகிறது.

இருவரும், 8 வாரமே ஆன தங்கள் மகள் அமினா-ஃபயேவை (Amina-Faye) கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

பச்சிளம் குழந்தைக்கு அவர்கள் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

குழந்தை வலியில் துடிதுடித்து சாக அனுமதித்ததற்காகவும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டனர்.

இன்னர் லண்டன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஓஷியாவுக்கு எட்டு ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜான்சனுக்கு ஏழு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மொத்தத்தில், குழந்தையின் விலா எலும்புகளில் 41 எலும்பு முறிவுகளும், கைகால்களில் 24 எலும்பு முறிவுகளும் இருந்தது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அது, குழந்தை அமினா-ஃபாயே தொடர்ந்து உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பது தெளிவாக தெரிவதாக மருத்துவர்கள் கூறினர்.

2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் திகதி லண்டனின் Southwark பகுதியில் தம்பதியினரின் வீட்டில் குழந்தை இறந்தது.

இங்கிலாந்தில் குழந்தை கொடுமை வழக்குகள் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here