லண்டனில் கொடூரச் சம்பவம்….16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!

0

தெற்கு லண்டனில் குரோய்டோனின் (Croydon) ஷ்ரப்லேண்டு பகுதியில் பிராக்கன் அவென்யூவில் (Bபracken Avenue) உள்ள ஒரு குடியிருப்பில், வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் பல கத்திக்குத்து காயங்களுடன் 16 வயது சிறுவனை பொலிஸார் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளான்.

சிறுவனுக்கு மருத்துவ முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் சில நிமிடங்களில் லண்டனின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்ற போது, சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை, 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு கிழக்கு சசெக்ஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரரையை தொடங்கியுள்ளனர்.

விசாரணையை வழிநடத்தும் துப்பறியும் தலைமை ஆய்வாளர் டேவ் பிளேர், இந்த கொலை தொடர்பால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடூரமான சம்பவம் தொடர்பான தகவல்களை அறிந்த எவரும் இருந்தால், அது எவ்வளவு சிறிய விடயமாக இருந்தாலும் பொலிஸை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here