லண்டனில் கொடூரக் கொலை… 13 வயது சிறுவன் கைது!

0

மேற்கு லண்டனின் டிரேட்டனில் உள்ள Yiewsley High Street-ல், Dariusz Wolosz 46 வயது நபர் கத்தியால் குத்தப்பட்டு 30 நிமிடங்கள் உயிருக்கு போராடி இறந்துள்ளார்.

அவருக்கு துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அவர் நள்ளிரவு 12.43 மணியளவில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விசாரணையில், உள்ளூரில் வசித்து வந்த போலந்து நாட்டவரான Dariusz Wolosz, லண்டன் Tavistock சாலையில் ஏற்பட்ட வாய் தகராறைத் தொடர்ந்து, ஒரு ஆண்கள் குழுவால் தாக்கப்பட்டதாக தாங்கள் நம்புவதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், இடுப்பு மற்றும் மார்பில் குத்தப்பட்ட காயங்கள் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தொடர்வதால் பாதிக்கப்பட்ட குடும்பம் மிகவும் கவலையடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை, அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் இருந்த வாகனங்கள் அதன் டாஷ்-கேம் காட்சிகளையும் அதற்கு வழிவகுக்கும் தருணங்களையும் படம் பிடித்திருக்கலாம்.

உள்ளூர்வாசிகள் தங்கள் doorbell மற்றும் டேஷ் கேமராக்களை சரிபார்க்குமாறு விசாரணைக்கு தலைமை தாங்கும் சிறப்பு குற்றப்பிரிவின் துப்பறியும் தலைமை ஆய்வாளர் Wayne Jolley கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 13 வயது சிறுவன் காவலில் வைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here