லண்டனில் அரங்கேறிய கோர சம்பவம்… பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட இளைஞர்…

0

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 15 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு வருகினற்து.

இந்நிலையில், பட்டபகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு லண்டனில், சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு குறித்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.

18 வயதான குலாம் சாதிக்(Ghulam Sadiq) என்ற இளைஞர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இந்நிலையில், முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக சம்பவயிடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸார் இதுவரை கைது நடவடிக்கை எதையும் முன்னெடுக்கவில்லை.

கொலை செய்யப்பட்ட குலாம் சாதிக் (Ghulam Sadiq) குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு அதிகாரிகள் அவர்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர்.

உடற்கூராய்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் லண்டன் நகரில் வாள்வெட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here