றம்பொட நீர்வீழ்ச்சியில் காணாமல் போன மூவர் தேடும் நடவடிக்கை தீவிரம்

0

நுவரெலியா – றம்பொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்றையதினம், 7 பேர் கொண்ட குழுவினர் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றுள்ளனர்.

அதன்போது, அவர்களில் மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதுடன், ஏனைய நால்வர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்றவர்களே இவ்வாறு சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர் என்றும் காணாமல்போயுள்ளவர்களில் 2 பெண்களும் ஆணொருவரும் அடங்குவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போயுள்ளவர்களை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here