ரோலர்கோஸ்டரில் பயணித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

ஜேர்மனியின் க்ளோட்டன் நகரிலுள்ள உல்லாசப் பூங்காவொன்றில் ரோலர்கோஸ்டரில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் தனது இருக்கையிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

57 வயதான பெண்ணொரவரே 26 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இப்பெண் எவ்வாறு வீழ்ந்தார் என்பது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் குற்றச்செயல்கள் எதுவும் இடம்பெற்றமைக்கான அறிகுறி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி ரோலர்கோஸ்டரையும் அப்பெண் பயணித்த வாகனத்தையும் ஆராய்வதற்கு பொறியியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரோலர்கோஸ்டரை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here