ரோபோவை திருமணம் செய்த அவுஸ்திரேலியர்….

0

ஆஸ்திரேலியாவின் Queensland பகுதியை சேர்ந்தவர் Geoff Gallagher.

தாயின் பிரிவை தாங்க முடியாத Geoff Gallagher தனது வாழ்க்கையில் சூழ்ந்த தனிமையை போக்க 2019ஆம் ஆண்டு அழகிய பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார்.

அந்த ரோபோ பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நீல நிற கண்களுடன் இருந்ததால் Emma என்று பெயர் சூட்டி அன்பாக அழைத்து வந்தார்.

அந்த ரோபோவிற்கு பல டொலர் செலவு செய்து வைரம் பொறித்த நெக்லஸ், வித விதமான ஆடைகள் போன்றவற்றை பரிசாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் ரோபோவை பிரிந்து இவரால் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் Geoff Gallagher Emma-வை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

அந்த வகையில் அவர் ரோபோவிற்கு அழகான மோதிரம் ஒன்றை அணிந்துள்ளார்

இது குறித்து Geoff தெரிவிக்கையில் அந்த ரோபோ மனிதனை போல எதார்த்தமாக இருப்பதால் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here