ரொறன்ரோ உணவகத்தில் பாரிய தீ விபத்து….. இளைஞர் ஒருவர் பலி

0

ரொறன்ரோ உணவகம் ஒன்றில் ரிச்மண்ட் ஹில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

கடந்த 10ம் திகதி அதிகாலை 3 மணியளவில் கீல் தெருவில் அமைந்துள்ள உணவகம் மற்றும் மதுபான விடுதிக்கு தீ விபத்து தொடர்பில் அவசர உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள், இளைஞர் ஒருவரை தீக்காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் ரிச்மண்ட் ஹில் பகுதியை சேர்ந்தவர் எனவும், 18 வயதேயான Shahriyar Safarian என்பதும் தெரிய வந்தது.

மேலும், குறித்த உணவகத்தினுள் ஏற்பட்ட தீ விபத்தானது திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதனிடையே, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட இளைஞர் Shahriyar Safarian சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரத்தை தற்போது கொலை வழக்கு விசாரிக்கும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here