ரொறன்ரோவை தாக்கிய சுழல்காற்று…. அனர்த்தத்தில் சிக்கிய மக்கள்

0

ரொறன்ரோவில் நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் பிரின்ஸ் வில்லியம் வே மற்றும் மப்லிவியூ ட்ரைவ் பிரதேசத்தை சுழல்காற்று தாக்கியுள்ளது.

இந்த சுழல் காற்றினால் வீடுகள் சிதைந்து மரங்கள் முறிந்து பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

இரண்டு கிலோ மீற்றர் பகுதியில் இந்த சுழல்காற்று பயணம் செய்த பகுதியில் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 8 பேரில் நான்கு பேர் மோசமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் .

1985 ஆம் ஆண்டு இதேபோன்ற பாரிய சுழல் காற்று வீசியதில் 600 வீடுகள் சேதமடைந்ததுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்குப் பின்னர் தற்போது இந்த மோசமான அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here