ரொறன்ரோவில் 15 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு…

0

ரொறன்ரோவைச் சேர்ந்த சால்டோன் சமுதா (Shalldon Samuda) என்ற 15 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

நோர்த் யோர்க்கின் டவுன்சீவிவ் பார்க், கெலீ வீதி மற்றும் செப்பர்ட் அவன்யூ ஆகியனவற்றிற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் 416-808-7400 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here