ரொறன்ரோவில் துப்பாக்கிச் சூடு…3 சிறார் உட்பட ஐவருக்கு நேர்ந்த கதி!

0

ரொறன்ரோவில் துப்பாக்கிச் சூடு தாக்ககுதல் நடைபெற்றுள்ளது.

அதில் 3 சிறார்கள் உட்பட ஐவரை இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

ரொறன்ரோவின் டான்ட்ரிட்ஜ் கிரசென்ட் பகுதியில் இரவு 9 மணியளவில் ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்து அவசர உதவிக் குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த மருத்துவ அவசர உதவிக்குழுவினர், சம்பவம் நடந்த அந்த குடியிருப்பில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் குழந்தை ஒன்றை மீட்டுள்ளனர்.

இன்னொரு குழந்தையும் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரு குழந்தையும் இன்னொருவரும் லேசான காயங்களுடன் தப்பியுள்ளதும் கண்டறியப்பட்டது.

மீட்கப்பட்ட ஐவரையும் முதலுதவிக்கு பின்னர் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர்கள் மற்றும், சம்பவத்தின் பின்னணி தொடர்பில் முதற்கட்ட விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here