ரிஷாட் வீட்டில் மற்றுமொரு பணிப்பெண் துஷ்பிரயோகம்! மைத்துனரும் கைது

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் முன்னதாக பணியாற்றி 22 வயதான பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனின் மைத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2015 – 2019ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே குறித்த 22 வயதுடைய பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

முன்னதாக ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி கடந்த 3ம் திகதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 12 நாட்களின் பின்னர் அண்மையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here