ரிஷாட் வீட்டில் எழுதப்பட்டிருந்த வார்த்தை! இஷாலினியின் சகோதரன் வெளியிட்ட தகவல்

0

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வீட்டில் உயிரிழந்த சிறுமி இஷாலினிக்கு, ஆங்கிலம் எழுதுவதற்கான திறமை இல்லை என, மரணமடைந்த டயகம சிறுமியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

எனக்குத் தெரிந்த வரையில் என்னுடைய தங்கையான இஷாலினிக்கு, ஆங்கிலம் எழுதுவதற்கான திறமை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்த இஷாலினி ஜூட், அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் 7ஆம் வகுப்பு வரையில் மட்டுமே கல்விப்பயின்றார்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டபோது, எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், அவர் தங்கவைக்கப்பட்ட அறையில், ஆங்கிலத்தில், ‘எனது மரணத்துக்கு காரணம்” என எழுதப்பட்டுள்ளது, இதுதொடர்பில் கேட்டபோதே இஷாலினியின் சகோதரன் திருபிரசாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனக்குத் தெரிந்தவகையில், ஏதாவது ஒன்றை பார்த்துகொண்டு எழுதும் திறமை எனது தங்கையிடம் இருக்கிறது. ஆனால், ஆங்கில எழுத்துகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து வசனமாக்கி எழுதும் வகையில் எனது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here