ரிஷாட் பதியூதீன் மீது மற்றுமொரு குற்றச்சாட்டு − விசாரணை ஆரம்பம்

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மீது மற்றுமொரு விசாரணையை கொழும்பு குற்றப் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.

சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியரை திட்டியதாகவும் மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவித்து வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமையவே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய மெகசீன் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேக நபரான ரிஷாத் பதியுதீன், கடந்த 15ஆம் திகதி தன்னைத் திட்டியதாகவும் மரண அச்சுறுத்தல் விடுத்தாகவும் வைத்தியரான பிரியங்க இந்துனில் புபுலேவெல முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு அளித்த வைத்தியர், பின்னர் பொரளை பொலிஸில் நேற்று முன்தினம் முறைப்பாடு அளித்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்தது.

இதனையடுத்து, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here