ரிஷாட் பதியுதீன் மனுமீதான விசாரணையில் இருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகல்

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணையில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்ற நீதியரசர் விலகியுள்ளார்.

அதன்படி, மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் கொண்ட அமர்வில் இருந்து நான்காவது நீதியரசராக மஹிந்த சமயவர்தன விலகியுள்ளார்.

குறித்த மனுமீதான விசாரணை இன்று காலை எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதியரசர் மஹிந்த சமயவர்தன தனிப்பட்ட காரணங்களுக்காக அமர்வில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

முன்னதாக, நீதியரசர்கள், ஏ.எச்.எம்.டி நவாஸ், யசந்த கோத்தாகொட மற்றும் ஜனக டி சில்வா ஆகியோர் இதில் இருந்து விலகிக் கொண்டனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என கோரி ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here