ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை கைது! வெளியாகிய காரணம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

பதியுதீன் சகோதரர்கள் அவர்களின் பௌத்தலோகா மாவத்தை மற்றும் வெள்ளவத்தை இல்லங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் மேலதிக விசாரணைகள் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here