ரிஷாட்டின் வீட்டில் சிறுமிக்கு நடந்தது என்ன?

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தவேளை தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் தங்கள் மகள் தனக்குதானே தீமூட்டியிருக்கமாட்டார் யாரோ எங்கள் மகளை கொலை செய்துள்ளனர் என சந்தேகப்படுகின்றோம் என தெரிவித்துள்ளனர்.

தான் கடனை அடைக்க முடியாத நிலையில் இருந்ததால் எனது மகள் விரும்பியே பணிப்பெண்ணாக வேலைப்பார்ப்பதற்கு சென்றார் என தாயார் தெரிவித்துள்ளார்.

அந்தவீட்டில் எனது மகள் தாக்கப்பட்டார் அவர் தொலைபேசி மூலம் இதனை தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் அங்கு இருக்க முடியவில்லை என மகள் தெரிவித்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

எனது மகளிற்கு நெருப்பென்றால் பயம் அவர் தனக்குதானே தீமூட்டியிருக்க மாட்டார் என உயிரிழந்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here