ராஜமெளலியின் ”ஆர்.ஆர்.ஆர் ”பட முக்கிய அப்டேட்!

0

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர்#RRRSecondSingleUpdate

இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தின் 45 நொடிகள் கொண்ட ஜிலிம்ஸ் வீடியோ சமீபத்தில் ரிலீஸாகி
வைரலானது. இப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதில், வரும் நவம்பர் 10 ஆம் தேதி ஆர் ஆர் ஆர் படத்தின் 2 ஆம் பாடம் ரிலீஸாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடல் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும்
ராம்சரண் ஆகியோர் நடனம் ஆடுவதற்கு ஏற்ப சூப்பரான பீட்டில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here