ராஜபக்ஷர்களின் ஆட்சி முடிவுக்கு வருகின்றது! பரபரப்பை ஏற்படுத்திய தேரர்

0

கொவிட் தாக்கத்தினாலும், பொருளாதார பாதிப்பினாலும் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திறமையானவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கவில்லை.

இதுவே அனைத்து பிரச்சினைக்கும் மூலக் காரணம். நாட்டுக்கு சேவையாற்றிய ராஜபக்ஷர்களின் ஆட்சி இத்துடன் நிறைவு பெறும் என அபயராம விகாரையில் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர்தெரிவித்தார்.

அபயராம விகாரையில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியுமாயின் அதனை ஏற்றுக்கொள்வோம்.

ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவே இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மீள்வதையும், குறைந்த விலைக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதையும் குறித்து மக்கள் அவதானம் செலுத்தியுள்ளார்கள்.

அரசாங்கம் நகைச்சுவை காட்டுகிறதா? என்ற சந்தேகம் காணப்படுகிறது. நாட்டில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தொடர்பில் நன்கு அறிவோம்.

நடுத்தர மக்கள் அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் மாபியாக்களாக செயற்படவில்லை. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களின் பெரும்பாலானோர் சந்தை மாபியக்களாக செயற்படுகிறார்கள். பொருத்தமானவர்களுக்கு உரிய பதவி வழங்கவில்லை.

கொவிட் தாக்கத்தினை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. திறமையானவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படவில்லை. நாட்டு சேவையாற்றிய ராஜபக்ஷர்களின் ஆட்சி இத்துடன் முடிவுக்கு வரும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here