ராஜகிரியவில் கோர விபத்து… இருவர் பலி!

0

ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டத்தின் அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பாரிய விபத்து இடம்பெற்றது.

52 வயதான உப காவல்துறை பரிசோதகர் மற்றும் பாரவூர்தியின் உதவியாளர் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ராஜகிரிய மேம்பாலம் மற்றும் ஆயுர்வேத சுற்றுவட்டத்திற்கு இடைப்பட்ட பகுதியில் காவல்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பாரவூர்தி ஒன்றை அவர்கள் சோதனை செய்து கொண்டிருக்கும் போது , ​​பத்தரமுல்லை நோக்கி வேகமாக பயணித்த வேன் குறித்த இருவரையும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பாக வேனின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தலவத்துகொடையைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here