ரஷ்ய வீரரை உபசரிக்கும் உக்ரைன் பெண்கள்! நெகிழ்ச்சியான செயல்

0

இளைஞரான ரஷ்ய வீரர் ஒருவர் தனது ஆயுதங்களை எறிந்துவிட்டு, உக்ரைன் பொதுமக்களிடம் சரணடைந்துள்ளார்.

மிகவும் பயந்து போயிருந்த அவருக்கு அந்த தாய்மார்கள் தேநீரும் உணவும் கொடுத்து உண்ண அளித்துள்ளனர்.

அவர் தனது தாயுடன் பேசுவதற்கு தங்கள் மொபைல் போனையும் கொடுத்து உதவியுள்ளனர்.

ஒரு பெண் மொபைலைப் பிடித்துக்கொள்ள, ஒரு கையில் தேநீரும், மறு கையில் ஒரு உணவையும் வைத்திருக்கும் அந்த ரஷ்ய வீரர், மொபைலில் தன் தாயைக் கண்டதும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளார்.

கதறியழும் அவரது முதுகைத் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறுகிறார்கள் உக்ரைன் பெண்கள்.

அத்துடன், போனின் மறுமுனையில் தன் மகனுடன் பேசும் அந்த தாய்க்கும் ஆறுதல் கூறுகிறார்கள்.

ஒரு பெண் அந்த வீரரின் தாயிடம், நடாஷா, கடவுள் உங்களுடன் இருப்பாராக, உங்கள் மகன் உயிருடனும் நல்ல நிலையிலும் இருக்கிறார்.

மீண்டும் உங்களுடன் பிறகு தொடர்பு கொள்கிறோம் என்று கூறுவதை, அந்த வீடியோவில் காண கூடியதாக உள்ளது.

அத்துடன், வீடியோவின் பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது.

தாங்கள் எதற்காக உக்ரைன் வந்திருக்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை.

மேலும் இது இந்த இளைஞர்களின் தவறு அல்ல,

அவர்கள் பழைய வரைபடங்களை வைத்திருக்கிறார்கள்.

திக்குத் தெரியாமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்கிறது அந்தக் குரல்.

இந்த வீடியோ ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவில் ரஷ்ய வீரர்களே உக்ரைன் மக்கள் சரணடையுங்கள் உங்களுக்கு உணவளிக்கப்படும்.

இந்த வீடியோ ரஷ்யாவிலும் உக்ரைனிலும் வைரலாக பரவி வருகின்றது.

தங்கள் நாட்டை ஊடுருவுவதற்காக வந்த இராணுவ வீரர் மீது உக்ரைனியர்கள் காட்டும் இரக்கத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here