உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது.
இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும் உடன்பாடு எட்டப்படவில்லை.
கெர்சன், கார்கீவ், தலைநகர் கீவ் ஆகியவற்றின் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதலை அதிகரித்துள்ளது.
உக்ரைனை நோக்கி 64 கி.மீட்டர் தூரத்திற்கு ரஷ்ய இராணுவ வாகனம் அணிவகுத்து நிற்கின்றது.
இதனால் ரஷ்யா மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் என அஞ்சப்படுகின்றது.
இந்நிலையில், ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து போட்டிகளில் இருந்தும் தடை என உலக தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தடகள கூட்டமைப்பு இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.