ரஷ்ய பீரங்கியை திருடிய விவசாயி… உக்ரைனில் நடப்பது என்ன..?

0

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த 6 நாட்களாக போர்தொடுத்து வருகிறது.

உக்ரைன் நகருக்குள் உள்ள ரஷ்ய ராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் உக்ரைனை சேர்ந்த விவசாயி ஒருவர் கிவ் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை தனது டிராக்டரில் கட்டி இணைத்து இழுத்து திருடி சென்றுள்ளார்.

இந்த நிகழ்வை வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பிளைமவுத் நாடாளுமன்ற எம்.பி. ஜானி மெர்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் பீரங்கியை கட்டி இழுத்து செல்ல அதன் பின்னால் ராணுவ வீரர் ஒருவர் ஓடும் காட்சி இடம் பெற்று உள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்டு ஜானி மெர்சர் தெரிவிக்கையில்,

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு சிறப்பாக நடப்பதாக விளங்கவில்லை.

உக்ரைன் நாட்டு டிராக்டர், ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை திருடி உள்ளது என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து உள்ளனர்.

இந்த வீடியோவை ஆஸ்திரியாவுக்கான உக்ரைன் நாட்டு தூதர் அலெக்சாண்டர் ஷெர்பாவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்.

அவர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் மிகவும் பலசாலிகள் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here