ரஷ்ய படையினரிடமிருந்து ஆயுதம் திருடும் முதியவர்…

0

ரஷ்ய இராணுவப் படையினரிடமிருந்து உக்ரைன் பிரஜையொருவர் ஆயுதங்களை திருடியுள்ளார்.

70 வயதான மைகோலா ரியாகோ என்ற முதியவர் ஆயுதங்களை கடத்தி வருகின்றார் என தெரிய வந்துள்ளது.

உக்ரைன் படையில் இணைந்து கொள்வதற்காக முயற்சித்த போதிலும், ரியாகோவின் வயதினை கருத்திற் கொண்டு படையில் இணைத்துக் கொள்வதனை உக்ரைன் பாதுகாப்பு படையினர் நிராகரித்துள்ளனர்.

உக்ரைன் படையினருக்கு ஏதேனும் ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்ற நோக்கில் ரியாகோ, இவ்வாறு ஆயுதங்களை களவாடியுள்ளார்.

ஆயுதங்களை களவாடுவதனால் ரஷ்ய படையினரால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை பொருட்படுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராய்கோ, சோவித் ஒன்றியத்தின் முன்னாள் இராணுவ உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஸ்ய படையினர் ஆயுதங்களை வாகனங்களில் கொண்டு செல்லும் போது ராய்கோ இவ்வாறு ஆயுதங்களை களவாடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here