ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு….! உக்ரைன் அறிவிப்பு

0

உக்ரைன் மீது ரஷ்யா 3வது நாளாக யுத்தத்தை தொடர்கிறது.

கீவ்வில் இருந்து மேற்கே 8 மைல் தொலைவில் கடும் சண்டை நடந்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அதிகாரபூர்வமாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.

முன்னர் இந்த போர் தொடர்பில் விளாடிமிர் புடின் தெரிவிக்கையில்,

உக்ரைன் நாட்டு படைகள் அரசு நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ராணுவத்தின் வசம் நிர்வாகம் வருவது மூலம், சமரசமான ஒரு முடிவுக்கு வர முடியும்.

உக்ரைனில் ரஷ்ய படைகள் வீரதீரத்துடன் போர் புரிந்து வருவதை பார்க்க முடிகிறது.

அதற்கு என் பாராட்டுகள் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here