ரஷ்ய ஜனாதிபதியின் இலக்குகளை அடையும் வரை போர் தொடரும்

0

உக்ரைன் – ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துவது தொடர்பில்டிரஷ்யாவுக்கு உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில்,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில் இந்த பொருளாதார தடைகள் நிச்சயமாக எதையும் மாற்றாது.

அதிபர் புதின் நிர்ணயித்த இலக்குகள் அடையும் வரை போர் தொடரும் என ரஷ்ய தேசிய பாதுகாப்பு துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

போரை முடிவுக்கு கொண்டுவர பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதனை உக்ரைன் மறுத்துள்ளது.

இந்நிலையில், பேச்சு வார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்ததால் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய இராணுவம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here