ரஷ்ய சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை! ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு

0

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது.

இந்நிலையில் ரஷ்ய சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால், ரஷ்ய சுற்றுலாப்பயணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கும் திட்டத்துக்கு ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் முழு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இது ரஷ்ய மக்களுடனான போர் அல்ல.

இது ரஷ்ய ஜனாதிபதி புடினுடனான போர் என ஜேர்மனி தெரிவித்துள்ளது.

ஆகவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் நாம் எடுக்கும் எந்த முடிவும், ரஷ்யாவிலிருந்து சுதந்திரமாக வெளியேற விரும்பும் ரஷ்ய மக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடாது என்று கூறியிருந்தார் ஷோல்ஸ்.

இந்நிலையில், ஜேர்மனி தற்போது, ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் மீது விசா கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் விவாதிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் உரிமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் சமரசம் செய்ய ஜேர்மனி தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here