ரஷ்ய உக்ரைன் போர்…! 300,000 வீரர்களை களமிறக்கிய நேட்டோ!

0

, ரஷ்ய அச்சுறுத்தலுக்கு எதிராக நேட்டோ அமைப்பு பிரம்மாண்டமாய் 300,000 வீரர்களை களமிறக்குகிறது.

இது குறித்து பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ள நேட்டோ தலைமையகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் Jens Stoltenberg தெரிவிக்கையில்,

ரஷ்யா தங்கள் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என நேட்டோ கருதுகின்றது.

பனிப்போருக்குப் பின், இதுவரை இல்லாத அளவில் 300,000 வீரர்களைக் களமிறக்குவது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது அதிகபட்சமாக நேட்டோவின் பதிலடிப் படையில் 40,000 வீரர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதை 6 மடங்கு அதிகமாக்கி, 300,000 வீரர்களைக் களமிறக்க நேட்டோ தயாராகிவருகிறது.

போர்ச்சூழல் இன்னமும் உக்கிரமாகிக்கொண்டே செல்லும் வாய்ப்புள்ளது.

உக்ரைன் இன்னமும் நேட்டோ அமைப்பின் உறுப்பினர் இல்லை.

எனவே, நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இல்லாத ஒரு நாட்டுக்காக அந்த அமைப்பு இவ்வளவு பிரம்மாண்ட நடவடிக்கையை எடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here