ரஷ்ய – உக்ரைன் போர் 165 சிறுவர்களுக்கு நேர்ந்த கதி

0

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக இதுவரையில் 165 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மேலும் 266 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, உக்ரைன் நகரமான மன்ஹூன்ஸில் காவல்துறையினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மரியபோல் நகரத்தில் இருந்து வெளியேற விரும்புவர்களை வெளியேற்றவும், அங்குள்ளவர்களுக்கு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கவும், செஞ்சிலுவை சங்கத்தின் குழு அங்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றிருந்தது.

இதன்போது, அவர்கள் காவல்துறையினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

மரியபோல் நகரில் அவர்களது பணிகளை எப்போது ஆரம்பிப்பார்கள் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here