உக்ரைன் போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில் பிரான்ஸ் முழுமையான பொருளாதார மற்றும் நிதிப் தடையை பிரகடனம் செய்துள்ளது.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் மிகவும் பயனுள்ளவை என்பதை நிரூபித்து வருகின்றன என பிரான்ஸ் நிதியமைச்சர் Bruno Le Maire விவரித்துள்ளார்.
நாங்கள் ரஷ்யா மீது ஒரு முழுமையான பொருளாதார மற்றும் நிதிப் போரை நடத்தி வருகிறோம்.
அது உக்ரைன் மீதான அதன் படையெடுப்புக்கான தண்டனையாக ரஷ்யப் பொருளாதாரத்தை சிதைக்கும் என Bruno Le Maire தெரிவித்துள்ளார்.
Le Maire-ன் கருத்துக்களுக்கு ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவார் Dmitry Medvedev கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பார்த்து பேசுங்கள்.. ஜென்டில்மேன்! மனித வரலாற்றில், பொருளாதாரப் போர்கள் பெரும்பாலும் உண்மையானதாக (போராக) மாறியது என்பதை மறந்துவிடாதீர்கள் என Dmitry Medvedev தெரிவித்துள்ளார்.