ரஷ்யாவுக்கு அலுமினியம் மற்றும் அது தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக அவுஸ்திரேலியா இந்த பொருளாதார தடையை விதித்துள்ளது.
ரஷ்யாவுக்கு தேவையான அலுமினிய வகைகளில் 20 சதவீதத்தை அவுஸ்திரேலியாவே இதுவரை காலமும் வழங்கி வந்தது.
இந்த தடை காரணமாக ரஷ்யா பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும், பொருட்களை தொடர்ந்து ஏற்றுமதி செய்ய முடியாமல் போகும் என வர்த்தக தரப்பினர் தெரிவித்துள்ளனர்