ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடை விதிக்க வேண்டும்…

0

ரஷ்யா மீது எண்ணெய் தடை உள்ளிட்ட பொருளாதார தடைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

மேற்கத்திய நாடுகளை உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி வலியுறுத்திள்ளார்.

காணொளி ஒன்றின் மூலம் கருத்துரைத்துள்ள அவர், சில தடைகளின் செயலற்ற தன்மையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரஷ்யாவின் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்காக உலகம் காத்திருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலுவான தடைகள் முன்னதாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் படையெடுப்பை தடுத்திருக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் கடந்த ஞாயிற்றுகிழமை மாத்திரம் உக்ரைனியில் இருந்து மனிதாபிமான வழிகளின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதன்படி, உக்ரைனின் மரியுபோலிலிருந்து 586 பேரும் லுஹான்ஸ்க்கில் இருந்து 513 பேரும் வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, அடையாளம் காணப்பட்ட உக்ரைன் கேந்திர இலக்குகளை குறிவைத்து, ரஷ்யா யுத்த கப்பல்களில் இருந்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடுவதாக யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கருங்கடல் வலயங்களில் நிலைகொண்டுள்ள யுத்த கப்பல்களில் இருந்து இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில கப்பல்கள் அந்த வலயங்கள் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன.

பின்னடைவினை சந்தித்த ரஷ்யா மீள ஒன்றிணைந்து இப்படியான தாக்குதலுக்கு ஆயத்தமாவதாக உக்ரைனினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here