உக்ரைனில் ரஷ்யப் படைகள் பொதுமக்களைக் கொலை செய்யும் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து கடந்த வாரம், மனித உரிமை கவுன்சிலிலிருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த தீர்மானத்துக்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்தது.
இந்நிலையில், 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் 58 நாடுகள் வாக்களிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து ரஷ்யா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த 24 நாடுகளில் ஒன்றான வடகொரியா, தற்போது ரஷ்யாவின் இடைநீக்கத்தை கண்டித்துள்ளது.
இதுதொடர்பில் கிம் ஜாங் உன் தலைமையிலான வட கொரியா அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு அமெரிக்காவே காரணம் என வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்கா, சட்டவிரோத மற்றும் மனிதாபிமானமற்ற அதன் தலைமையிலான மேலாதிக்க ஒழுங்கை நிலைநிறுத்த, சுதந்திர நாடுகளையும், சர்வதேச அரங்கில் அவர்களுக்கு சவால் விடும் சக்திகளையும் தனிமைப்படுத்துகிறது.