ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை சாத்தியம் இல்லை… உக்ரைன் அதிபர்.!

0

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த பெப்ரவரி மாதம் முதல் தாக்குதலை நடத்தி வருகின்றது.

உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன்(Recep Tayyip Erdogan) தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக அவர் உக்ரைன் சென்றுள்ளார்.

அவருடன் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசும்(Antonio Guterresum), உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை(Volodymyr Zelenskyy) நேற்று சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது.

உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்யா அமைதிக்கு தயாராக இருப்பதாக எர்டோகன் கூறியதை அடுத்து தான் மிகவும் ஆச்சரியமடைந்ததாக ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.

மேலும் முதலில் அவர்கள் எங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

அதன் பின்னர் பார்க்கலாம் என உக்ரைன் அதிபர் விவரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here