ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்த உக்ரைன்!

0

யுக்ரைனில் ரஷ்யா போரை முன்னெடுத்து வருகின்றது.

இதுரையில் 352 யுக்ரைனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் 16 சிறுவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய யுக்ரைன் தயாரிப்பிலான சரக்கு விமானமான Antonov 225 -225 MRIYA ஆசலைய ரஷ்யாவின் தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ளது.

கிவ் நகருக்கருகில் உள்ள ஹொஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷ்ய இராணுவ படை நடத்திய தாக்குதலின் போது குறித்த விமானம் அழிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஷ்யாவுக்கும், யுக்ரைனுக்கும் இடையில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இந்த பேச்சுவார்தையானது பெலாருஸ் எல்லையில் இடம்பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பேச்சுவார்த்தைக்கு மறுப்புத் தெரிவித்த யுக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி தற்போது நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட இணக்கம் வெளியிட்டார்.

இதன்படி, இன்றைய தினம் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தையின் போது, பெலருஸ் பிராந்தியத்தில் விமானங்கள், உலங்குவானூர்திகள் உள்ளிட்ட எவையும் பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதற்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here