ரஷ்யாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபை

0

ரஷ்யாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கடுமையான எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை குறித்த நாடுகள் வன்மையான கண்டித்துள்ளன.

உக்ரைனுக்கான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு திட்ட யோசனை தோல்வியடைந்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குறித்த யோசனையில் 15 உறுப்பு நாடுகளில் 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.

நிரந்தர உறுப்பு நாடுகளில் சீனா வாக்களிக்காத போதிலும் மூன்று நாடுகள் ஆதரவளித்துள்ளன.

அத்துடன் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பன வாக்களிக்கவில்லை.

எவ்வாறாயினும் ரஷ்யா தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி குறித்த யோசனையை தோல்வியடைய செய்தது.

குறித்த வாக்கெடுப்புக்கு பின்னர் கருத்துரைத்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர், ரஷ்யால் தங்களது குரலை அடக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here