ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

0

ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் ‘பாரிய பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளது.

இதனை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய தலைவர்களுக்கு ஒப்புதலுக்காக பாரிய மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளின் தொகுப்பு வழங்கப்படும் அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்யாவின் பொருளாதாரத் தளத்தையும் நவீனமயமாக்கும் திறனையும் பலவீனப்படுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா இதுவரை கண்டிராத கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here